
பந்திங், ஏப் 1- பள்ளி மாணவர்களுக்கு யோகா மற்றும் தியான பயிற்சியை வழங்குவது தொடர்பில் கோல லங்காட் மாவட்டத்தை சேர்ந்த 13 தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் விரைவில் சந்திப்பு நடத்தப்படும் என்று கோலலங்காட் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ் ராமசாமி கூறினார்.
தமிழ்ப்பள்ளிகள் நமது தேர்வு என்று மட்டுமே பேசிக்கொண்டு இல்லாமல் அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எந்த வகையில் உதவி செய்ய முடியும் என்பதை நாம் சீர்தூக்கி பார்க்க வேண்டும். அந்த வகையில் இந்தியர்களின் பாரம்பரிய யோகா மற்றும் தியானம் போன்றவற்றை பள்ளி மாணவர்களுக்கு முறையை போதிப்பதின் வழி அவர்களை ஒரு சிறந்த மாணவர்களாக உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக அவர் கூறினார்.
நன்றி – சிலாங்கூர் கினி

