
பாடாங் பெசார், ஏப் 5-
அரசாங்கம் வழங்கும் மானிய உதவிகள், இலக்கிடப்பட்டுள்ள பிரிவினருக்கு சென்று சேர்வதையும், அவர்களில் 80 முதல் 85 சதவீத மக்கள் உண்மையில் அதனை அனுபவிப்பதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் பாடுபடுவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
உதவி மானிய பலன்களை பணக்காரர்கள் மற்றும் நாட்டிலுள்ள சுமார் 3.5 மில்லியன் வெளிநாட்டினர் அனுபவிப்பதை தடுக்கும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளது என்றார்.
“நம் நாட்டில் உள்ள பணக்காரர்கள் கூட எண்ணெய் மானியங்களைப் பெறுகிறார்கள். எனவே மானியத்தின் பலன் இலக்கிடப்பட்டுள்ள பிரிவினரில் 80 முதல் 85 சதவிகித மக்களுக்கு நேரடியாகச் சென்று சேரும் வகையில் அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
Bernama

