
பிறக்கின்ற மங்களகரமான ஸ்ரீ க்ரோடி நாம உகாதியை முன்னிட்டு தெலுங்கு சமூகத்தினர் அனைவருக்கும்மலேசிய தெலுங்கு சங்கத்தின் துணைத் தலைவர் சத்தியா சுதாகரன் உகாதி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
இன, மத, நிற வேறுபாடின்றி அனைத்து மலேசியர்களும் ஒன்றிணைந்து வேற்றுமையில் ஒற்றுமையை வளர்க்க வேண்டும். இந்த உகாதி அன்று, நம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கும் முதல் உணவுஉகாதி பச்சடி. உகாதி பச்சடி என்பது இனிப்பு, புளிப்பு, உப்பு, காரமான, மசாலா மற்றும் கசப்பு ஆகிய ஆறுவெவ்வேறு சுவைகளைக் கொண்ட கலவையாகும்.
இது வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, சோகம், கோபம், வெறுப்பு, பயம் மற்றும் ஆச்சரியம் ஆகியவற்றின்கலவையாகும் என்பதைக் குறிக்கிறது.
இந்த தெலுங்கு புத்தாண்டு நமது தெலுங்கு சகோதர சகோதரிகள் அனைவருக்கும் செழிப்பையும், முன்னேற்றத்தையும், செழுமையையும் கொண்டு வரட்டும். ‘உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும்வளமான யுகாதி வாழ்த்துக்கள்!’ என்று சத்தியா சுதாகரன் தமது வாழ்த்துறையில் கூறினார்

