
கோலாலம்பூர், ஏப்ரல் 13: சித்திரை தமிழ்ப் புத்தாண்டு, வைசாகி விஷு பண்டிகையைக் கொண்டாடி மகிழும் தமிழ், சீக்கியர் மற்றும் மலையாளி சமூகத்தினருக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
தனது ஃபேஸ்புக்கில் பதிவின் மூலம், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த புத்தாண்டை கொண்டாடுபவர்களுக்கு மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் தர வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்தார்.
“நமது நாட்டின் பலத்தின் முதுகெலும்பாக இருக்கும் ஒற்றுமையின் உணர்வைத் தொடர்ந்து பேணி காக்கும் படி”அவர் கேட்டுக் கொண்டார்.
பெர்னாமா

