
சென்னை: தோல்வியை மறைக்கவே வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டதாக பாஜக கூறுகிறது என மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்த மக்களவைத் தேர்தல் மதவாத, பாசிச அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எனமிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
மதிமுக தொண்டர்களைப் போலவே கூட்டணி கட்சியினர் களத்தில் பணியாற்றினர்.
திருச்சியில் போட்டியிட வாய்ப்பளித்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன் என்று அவர் சொன்னார்.
இந்து செய்தி

