டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் நம்பிக்கை துரோகம் இழைத்திருந்தாலும் அவர் தலைமையிலான பெரிக்கத்தான் நேஷனலுடன் ஒத்துழைக்க தயார் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நாம் ஒன்றிணைந்து அம்னோவை வீழ்த்தி காட்டுவோம். அந்த வகையில் பெரிக்கத்தான் நேஷனலுடன் ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன்.
டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் முன்பு என் முதுகில் குத்தினார்.இதை நான் மறந்து விடுகிறேன்.
நாட்டு மக்களுக்காக மீண்டும் அவருடன் ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன் என்றார் அவர்.