கோலகுபு பாருவில் பெரிக்கத்தான் நேஷனல் வெற்றி பெறும்! டத்தோ பரமேஸ்வரன் கணிப்பு

செ.வே. முத்தமிழ் மன்னன்

கோலாலம்பூர் ஏப்ரல் 24-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பெரிக்கத்தான் நேஷனல் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று கெராக்கான் கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோ பரமேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் இந்தியர்களின் ஆதரவு எங்களுக்கு இல்லை. ஆனால் இப்போது இந்தியர்களின் ஆதரவு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம் இதை செய்வோம் என்று வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் இன்று எதுவுமே நடக்காததால் இந்தியர்கள் பெரும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பானுக்கு எதிராக இந்தியர்கள் வாக்களிப்பார்கள் என்பதை இது உணர்த்துகிறது என்ற அவர். அந்த வகையில் பெரிக்கத்தான் நேஷனல் இந்த இடைத்தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles