டத்தோஸ்ரீ அன்வாரை சுற்றி இருக்கும் இந்திய தலைவர்கள் சரியான ஆலோசனை கூறியிருந்தால் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாம்- ராயுடு கூறுகிறார்

காளிதாஸ் சுப்ரமணியம்
மா. பவளச்செல்வன்

கோலகுபு பாரு ஏப்ரல் 24-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சுற்றி இருக்கும் இந்திய தலைவர்கள் சரியான ஆலோசனைகள் கூறி இருந்ததால் இந்திய சமுதாயம் எதிர் நோக்கிய பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாம் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு தெரிவித்தார்.

இன்று இந்திய சமுதாயம் நடப்பு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்ததற்கு இது ஒரு முக்கிய காரணம். முன்பு இந்தியர்கள் பிரதமர் மீதும் பக்கத்தான் ஹராப்பான் மீதும் அதிக நம்பிக்கை வைத்தனர். ஆனால் இன்று இந்த நம்பிக்கை குறைவதற்கு இவர்கள்தான் காரணம்.

பிரதமரை சுற்றி இருப்பவர்கள் இந்திய சமுதாயம் எதிர்நோக்கி கொண்டிருக்கும் பிரச்சனைகளை பற்றி எடுத்து கூறி தீர்வு பிறக்க போராடி இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் எதையும் செய்யவில்லை.
எங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பில் இந்த தலைவர்கள் இருக்கிறார்கள்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக வந்தால் இந்திய சமுகத்தின் பிரச்சினைகள் படிப்படியாக தீர்வு காணும் என்று நம்பிக்கை வைத்தார்கள்.

இது எதுவுமே நடக்காததால் இந்தியர்கள் இன்று ஆத்திரம் கொண்டிருக்கிறார்கள் என்றார் அவர். இந்தியர்களின் விவகாரங்கள் குறித்து பிரதமரிடம் நேரடியாக முறையிட முடிவு செய்துவிட்டோம்.

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் உட்பட பலரும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளார் என்று இன்று கோலகுபு பாருவில் ஊடகவியலாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

உலு சிலாங்கூர் கவுன்சிலர் புவனேஸ்வரன் பச்சை முத்து, முன்னாள் கவுன்சிலர் விக்னேஸ்வரன்,முரளி, தேவன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles