சிலாங்கூர் மாநில அரசு இந்தியர்களுக்கு நிறையவே செய்திருக்கிறது! ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு பெருமிதம்

காளிதாஸ் சுப்ரமணியம்


கோலகுபு பாரு ஏப்ரல் 24-
சிலாங்கூர் மாநில பக்கத்தான் ஹராப்பான் அரசு மற்றும் இப்போதைய மாநில ஒற்றுமை அரசாங்கம் இந்தியர்களுக்கு நிறைவான வகையில் சேவையாற்றி இருப்பதாக ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு தெரிவித்தார்.

2008 ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை சிலாங்கூர் மாநில அரசு மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழ் பள்ளிகளுக்கும் ஆண்டு தோறும் 50 லட்சம் வெள்ளியை வழங்குகிறது.

தமிழ் பள்ளிகளில் பயிலும் வசதி குறைந்த மாணவர்களுக்கு தலா 300 வெள்ளி இலவச போக்குவரத்து கட்டணம், உயர் கல்விக்கூடங்களில் பயலும் வசதி குறைந்த இந்திய மாணவர்களுக்கு 3,000 வெள்ளி முதல் 5,000 வெள்ளி கல்வி நிதியை வழங்குகிறது.


சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மூத்த குடி மக்களுக்கு நிதி உதவி, இந்து கோயில்களுக்கு ஆண்டுதோறும் 17 லட்சம் வெள்ளி மானியம், தீபாவளி பற்று சிட்டுகள், சிறு தொழில் செய்யும் இந்திய வியாபாரிகளுக்கு கடனுதவி மற்றும் வியாபார பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

சிலாங்கூர் மாநிலத்தை பொறுத்தவரையில் மாநில அரசு சிறப்பான முறையில் இந்தியர்களுக்கு உதவியுள்ளது.

அந்த வகையில் கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்தியர்கள் பக்கத்தான் ஹராப்பானுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles