
மா. பவளச்செல்வன்
கோலகுபு பாரு ஏப்ரல் 24-
மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தி விடாதீர்கள் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதி ராவ் இந்திய சமுதாயத்தை கேட்டுக்கொண்டார்.
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்தியர்கள் வாக்களிக்க வேண்டாம் என்று சொல்வது சுயநல நோக்கம் கொண்டது.
வாக்களிப்பது நமது உரிமை. ஆகவே டிக் டாக் இல் பேசிக் கொண்டிருக்கும் கோமாளிகளை பெரிபடுத்தாமல் தைரியமாக வாக்களிக்க வரும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
தேசிய நீரோட்டத்தில் இந்தியர்கள் ஓரங்கட்டப்பட்டது மற்றும் புறக்கணிக்கப்பட்டது உண்மைதான்.
இதற்காக தெருவில் இறங்கி போராடியவர்கள் நானும் ஒருவன். இந்திய சமுதாயத்துக்காக போராடாதவர்கள் இன்று வாக்களிக்க வர வேண்டாம் என்றெல்லாம் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று அவர் சொன்னார்.

