டாக்டர் இராமசாமி பெரிக்கத்தான் நேஷனலில் சேர வேண்டும் – அமைச்சர் பாமி பட்சில்

கோலகுபு பாரு ஏப்ரல் 30-
மலேசிய மக்கள் உரிமைக் கட்சி (உரிமை) தலைவர் பேராசிரியர் டாக்டர் பி ராமசாமி பெரிக்கத்தான் நேஷனல் (பிஎன்) கூட்டணியில் சேருமாறு தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் பரிந்துரைத்துள்ளார்.

ஒற்றுமை அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையில் அவர் அடிக்கடி வெளியிட்ட அறிக்கைகளின் காரணமாக, முன்னாள் டிஏபி தலைவரான அவரை பல பிஎன் தலைவர்கள் விரும்புவார்கள் என்று அவர் நம்பியதே இதற்குக் காரணம் என்றார் அவர்.

“இந்த டாக்டர் இராமசாமியிடம் அன்பு குறைவு.அதனால், பி.என்-ல் சேர முயற்சிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஏனென்றால் பி.என்-இல் உள்ள பல தலைவர்கள் இவரை நேசிப்பார்கள் என கோலகுபு பாருவில் நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த போது அவர் இதனை சுட்டிக்காட்டினார்.

மலேசியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறியதால் அரசுக்கு பாடம் புகட்ட வேண்டுமென்று டாக்டர் இராமசாமி வலியுறுத்தியுள்ளார்.

கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் உரிமை கட்சி களம் இறங்கிவிட்டது.

இங்குள்ள வாக்காளர்கள் பக்கத்தான் ஹராப்பானுக்கு எதிராக வாக்களிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மலேசிய கினி

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles