தங்க கணேசன் தலைமையிலான நிர்வாக குழுவினரே மலேசிய இந்து சங்கத்தின் சட்டப் பூர்வ உறுப்பினர்கள் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
மலேசியா இந்து சங்கத்தின் தலைவர் யார் என்ற சட்டப் பிரச்சினை எழுந்தது.
இரு மாதங்கள் முன்பு நடைபெற்ற தேர்தலில் தங்க கணேசன் தலைமையிலான அணியினர் அமோக வெற்றி பெற்று மலேசிய இந்து சங்கத்தின் பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
பதவி விலகுவதாக அறிவித்த டத்தோ மோகன் ஷான் பின்னர் தாம் தான் இந்து சங்கத்தின் தலைவர் என்று அறிவித்தார்.
இது தொடர்பில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தங்க கணேசன் தலைமையிலான அணியினர் சட்டப் பூர்வமானவர்கள் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.