
கிள்ளான் கேபிஜே மருத்துவமனையில்தீபாவளிக்காக போடப்பட்ட அழகிய வண்ணக் கோலத்தை காலணியால் மிதித்து சேதப்படுத்தியது தொடர்பில் இரு மருத்துவமனை ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
என்று வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் விஜயராவ் தெரிவித்தார்.
இந்த வண்ண கோலத்தை திமிர் பிடித்த ஆடவர் ஒருவர் காலணியால் மிதித்து சேதப்படுத்தும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கோலத்தை மிதித்து அலங்கோலப்படுத்தியவரும் அதை விடியோ படம் எடுத்தவுடன் நேற்றிரவு விசாரணைக்கு வந்தபோது கைது செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
ஒற்றுமை மற்றும் சுபிட்சத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்த கொண்ட குற்றத்திற்காக போலீசார் இவர்கள் விசாரினை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பணியாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கிள்ளான் கேபிஜே மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.