குவைத் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் :

சென்னை, ஜூன் 13-
குவைத் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


குவைத் தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் கேரளாவை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.


இதனிடையே, குவைத் தீ விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த மன்னர் ஷேக் அல் சபா உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் கேரளா, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என குவைத் தடயவியல் துறை தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை குவைத்திற்கான இந்திய தூதர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles