சேதம் அடைந்த ஆலயத்தை சீரமைப்பு செய்ய கெடுபிடிவிதிப்பாத!!? சிகாமாட் நகராண்மை கழகம் தடைவிதிப்பு ஏற்புடையது அல்ல!!

ஜொகூர் ,சா ஆ அன்னை தேவி ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் சீரமைப்பு செய்வதற்கு தடை விதிக்கும் சிகாமாட் நகராண்மை கழகத்தின் செயல் பாரப்பச்சமாக இருப்பதாக முன்னாள் பெக்கோ
சட்டமன்ற வேட்பாளர் திரு சந்திர சேகரன் ஆறுமுகம் ஏற்புடையதாக இல்லை என கூறிபிட்டுள்ளார்.

கடந்த ஆண்டில் ஏற்பட்ட பலத்த மழையால் அந்த ஆலயத்தின் கூரைகள் முற்றாக சேதம் அடைந்ததைத் தொடர்ந்து அவ் வாட்டார மக்களே நிதி திரட்டி அவ் ஆலயத்தை சீரமைக்கும் முயற்சியில் இறங்கினார்கள் என்பது குறிப்பிடதக்கது.

இந்த சூழ்நிலையில் சிகாமாட் மாவட்டமன்றத்தின் இந்த தடை செயல் வருத்தம் அளிப்பதாகவும் மாநில முதல்வர் இந்த விவாகாரத்தில் தலையிட்டு அந்த ஆலயத்தை சீர் அமைக்க உதவி செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்.

மேலும், ஜொகூர் மாநில முதல்வர் டத்தோ ஓன் ஆபிஸ் அந்த விவகாரத்தில் தலையிட்டு ஒரு சுமூகமாக தீர்வை எற்படுத்தி தருவார் என தாம் நம்புவதாக சமூக ஆர்வலருமான திரு சந்திர சேகரன தனது அறிக்கையில் கேட்டு கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles