
நாட்டை கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றி ஒரு நல்ல ஆட்சி மலர மலேசியர்கள் திரண்டு வந்து பக்கத்தான் ஹரப்பானுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யும் படி பத்து காஜா நாடாளுமன்ற தொகுதியில் ஜசெக சார்பில் போட்டியிடும் வி. சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது
*காலத்தின் கட்டாயம்.. நாட்டை கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு மலேசிய ரின் கடமையாகும்.
நம் அடுத்த தலைமுறையினரை நினைவில் கொண்டு ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே பத்து காஜா நாடாளுமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் சிவக்குமாரின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது என்று வர்ணிக்கப்படுகிறது.
தொகுதி மக்களுக்கு நிறைய சேவைகளை வழங்கி இருப்பதால் இவர் அமோக வெற்றி பெறுவார் என்பதில் ஐயமில்லை.

