

கோலாலம்பூர் ஆக 17- நாட்டில் சிறந்த கூட்டுறவுக் கழகமாக எம்சிஐஎஸ் கூட்டுறவுக் கழகம் தொடர்ந்து விளங்கும். அக்கழகத்தின் தலைவரும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான குணராஜ் ஜோர்ஜ் இதனை கூறினார்.
எம்சிஐஎஸ் கூட்டுறவுக் கழகம் 70 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டதாகும். டத்தோ குலராஜா தலைமையில் கூட்டுறவுக் கழகம் தொடங்கப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.
தற்போது 40 மில்லியன் சொத்துகளை இக்கூட்டுறவுக் கழகம் கொண்டுள்ளது. அதே வேளையில் நாட்டின் சிறந்த 10 கூட்டுறவுக் கழகங்களில் ஒன்றாக இது விளங்கி வருகிறது.
இந்நிலை தொடர வேண்டும். அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுப்போம் என்று அவர் கூறினார். எம்சிஐஎஸ் கூட்டுறவுக் கழகயத்தின் 70 ஆண்டுக்கால வரலாற்றில் பலர் பல சேவைகளை வழங்கியுள்ளனர்.
அச்சேவையாளர்களை அங்கீகரிக்கும் நோக்கில் தான் இன்றைய நிகழ்வு நடைபெற்றது. எம்சிஐஎஸ் கூட்டுறவுக் கழகம் முன்னாள் தலைவர்கள், பணியாளர்கள், ஏஜென்சிகள் 3 பிரிவுகளில் 15 பேருக்கு சிறப்பு செய்யப்பட்டது.
அதே வேளையில் கழகத்தை சேர்ந்தவர்களின் பிள்ளைகளுக்கு அன்பளிப்புகள் வழங்கப்படது. கல்வி தேர்வுகளில் சிறந்து விளங்குவதன் மூலம் அவர்களுக்கு இந்த அன்பளிப்புகள் வழங்கப்பட்டது என்று குணராஜ் கூறினார்.

