

அம்பாங், ஆக 17-
அரசு ஏஜென்சிகளுடன் சிலாங்கூர் மாநில அரசாங்கம் நடத்தி வரும் வேலை வாய்ப்பு கண்காட்சி வேலை தேடுபவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தெரிவித்தார்.
இன்று அம்பாங் பண்டான் இண்டாவில் ஜோப்கேர் வேலை வாய்ப்பு சந்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
.
பல்வேறு தொழில் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் வேலை தேடுபவர்களுக்கு வேலை காலியிடங்கள் குறித்து விளக்கம் அளித்தன.
ஜோப்கேர் வேலைவாய்ப்பு கண்காட்சி மக்களுக்கு சிறந்த முறையில் வேலைகளை வழங்கி வருவதாக மனித வள துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான வீ.பாப்பாராய்டு அறிவித்தார்.
“இத்திட்டம் வேலை தேடுபவர்களுக்கு ஆதரவளிப்பதற்கு பொது மக்களிடையே வேலை வாய்ப்புகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் தொடர்ச்சியான முயற்சிகளில் ஒன்றாகும்.
“இத்திட்டம் வேலை தேடுபவர்களுக்கு ஆதரவளிப்பதற்கு பொது மக்களிடையே வேலை வாய்ப்புகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் தொடர்ச்சியான முயற்சிகளில் இது ஒரு பகுதியாகும் என்றார் அவர்.
இன்று நடைபெற்ற வேலை வாய்ப்பு கண்காட்சி நிகழ்வில் அம்பாங் ஜெயா கவுன்சிலர் மோகன் ராஜ் உட்பட கிராம கலந்து சிறப்பித்தனர்.

