
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் செப் 25-
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் மூத்த ஆலோசகராக குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு.செல்வராஜு மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சங்கத்தின் தலைவர் செ.வே. முத்தமிழ் மன்னன் தலைமையில் இன்று நடைபெற்ற சங்கத்தின் முதல் செயலவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் வளர்ச்சிக்கு டத்தோ டாக்டர் கு.செல்வராஜு பல ஆண்டுகளாக பக்கம் பலமாக இருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் சங்கத்தின் ஆண்டு கூட்டம் நடைபெற இலவச மண்டபம் மற்றும் உணவை அவர் வழங்கி வருகிறார்.
மேலும் சங்கத்தின் வளர்ச்சிக்கு அவர் பக்கப் பலமாக இருக்கிறார்.
அந்த வகையில் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் மீண்டும் மூத்த ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் . அதோடு உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்ய பிரகாஷ் , ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ ஏ.கே ராமலிங்கம்
மலேசியத் தமிழ் கலைஞர் இயக்கத் தலைவர் K. பழனிசாமி உலு சிலாங்கூர் கவுன்சிலர் ப. புவனேஸ்வரன் ஆகியோர் சங்கத்தின் புதிய ஆலோசகராக நியமிக்கப்பட்டனர்
என்று சங்கத்தின் செயலாளர் வெற்றி விக்டர் தெரிவித்தார்.

