
ஷா ஆலம்,,அக் 1-
சீபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தை தாக்கும் முயற்சியில் ஈடுப்பட்ட வூல்ஃப் பேக் கும்பலின் முன்னாள் தலைவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நீதிமன்றம் விதித்தது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சுபாங் ஜெயாவில் உள்ள சீபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு எதிராக கும்பல் ஒன்று தாக்குதல் நடவடிக்கையில் ஈடுப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பில் வூல்ஃப் பேக் கும்பலின் முன்னாள் தலைவர் மஹாடி மாமாட் கைது செய்யப்பட்டார்.
அவர் மீதான வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டு வந்தது.
39 வயதான அவர் மீது 8 குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று நீதிபதி டத்தோ நோரின் பஹாருடின் சம்பந்தப்பட்ட ஆடவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்னாமா

