
பத்து காஜா,அக்01: உலகளாவிய நிலையில் கடந்தக் காலங்களோடு ஒப்பிடுகையில் ரிங்கிட்டின் மதிப்பு நனிச் சிறந்த நிலையில் உயர்ந்திருப்பதும் சிறந்த செயல்திறன் கொண்ட நிலையிலும் ரிங்கிட்டின் மதிப்பு உயர்ந்திருப்பதும் நம்பிக்கையான சூழலை ஏற்படுத்தியிருப்பதாக கூறிய பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவகுமார் இந்நிலைக்கு மூலதனமான அதீத்திறன் கொண்ட மடானி அரசாங்கத்தையும் ஆக்கப்பூர்வமான தலைமைத்துவத்தின் சான்றாக திகழும் மாண்புமிகு பிரதமரையும் அவர் வெகுவாக பாராட்டி நன்றியினை தெரிவித்து கொண்டார்.
இந்த வளர்ச்சியும் செயல்திறன் கொண்ட உயர்வும் மடானி அரசாங்கத்தின் பொருளாதார செயல்திட்டங்களின் ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பு என்றும் குறிப்பிட்ட அவர் நாட்டின் பொருளாதாரம் சரியான அல்லது நம்பிக்கையான இலக்கை நோக்கி மடானி அரசாங்கம் இட்டுச் செல்வதற்கான பெரும் சான்று இது என்றார்.மேலும்,கடந்த மூன்று மாதங்களில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 14.35 விழுகாடு உயர்ந்துள்ளது.இது 14.2 விழுகாடு உயந்த தங்கத்தை காட்டிலும் விஞ்சியது. இந்தத் தரவு ஜூன் 27 முதல் செப்டம்பர் 27 வரையிலான 2023ஆம் ஆண்டு இதேகாலகட்டத்தை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
“MUFG” வங்கியின் மூத்த ஆய்வாளர் லாயிட் சான் கூறுகையில் அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் ரிங்கிட்டின் வளர்ச்சியும் மதிப்பும் சிறந்த செயல்திறனை கொண்டிருப்பதோடு ரிங்கிட்டின் இந்த வளர்ச்சியான மலேசியாவின் பொருளாதார நிலைதன்மையை வலுவானதாக நிலைப்பெற செய்யும் என்றார்.மேலும்,மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்பு சுழற்சி ஆகியவை ரிங்கிட்டின் அதீத மீட்சிக்குக் காரணம் என்றும் சான் கூறியதையும் சிவகுமார் சுட்டிக்காண்பித்து இவ்வாறு கருத்துரைத்தார்.
ரிங்கிட்டின் இந்த மதிப்பு வளர்ச்சியானது மலேசியாவின் பொருளாதார நிலைதன்மை மீதான நம்பிக்கையை உலகளாவிய நிலையில் ஆட்கொள்ளும் என்பதில் துளியும் ஐயமில்லை.அதேவேளையில்,ரிங்கிட்டின் இந்த வளர்ச்சி அனைத்துலக நிலையிலான மலேசியாவின் முதலீட்டாளர்களுக்கு மலேசியா சரியான இலக்கில் தடம் பதித்து ஆக்கப்பூர்வமாக முன்னேறிக்கொண்டிருப்பதை எடுத்துரைக்கிறது என்றார்.
அதுமட்டுமின்றி, ரிங்கிட்டின் இந்த உயர்வு மடானி அரசாங்கத்தின் பொருளாதார முன்னெடுப்புகளின் சிறந்த நிலையை தெளிவுப்படுத்தியிருப்பதோடு மடானி அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் வலுபெறவும் செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும், சரியான இலக்கில் பயணிக்கும் நமது பொருளாதார நகர்வு நீண்டக்கால பொருளாதார செயல்பாட்டில் நிலையான நடைமுறையை கொண்டிருப்பதோடு, மலேசியா சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் மிகுந்த நாடு மாட்டுமில்லை, மாறாய் அது அதீத வளர்ச்சியும் வலுவான நிலைப்பட்டையும் நோக்கி மேம்பாடும் வளர்ச்சியும் கொண்டு சிறந்த நம்பிக்கையான களத்தையும் உருவாக்கும் என்பதை நடப்பிலான ரிங்கிட்டின் மதிப்பின் உயர்வு பெரும் சான்றாக நினைவுறுத்தியிருப்பதாக அவர் மேலும் நினைவுறுத்தினார்.
நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை சரியான இலக்கில் பயணிக்கவும் ரிங்கிட்டின் மதிப்பு உலகளாவிய நிலையில் உயர்வடையவும் மதிப்புமிகு நமது பிரதமருடன் கரம்கோர்த்து செயல்பட்ட அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களையும் பாராட்டி போற்றிய சிவகுமார் ரிங்கிட்டின் இந்த அடைவுநிலை பெருமைமிகுந்த ஒன்று எனவும் பெருமிதம் கொண்டார்.
இயக்கவியல் ஆற்றலும் செயல்திறனும் கொண்ட பிரதமரின் தலைமைத்துவம் உட்பட அனைத்து தரப்பின் ஒத்துழைப்பும் ஆதரவும் மலேசியா இன்னும் அதிகமான சாதனைகளையும் வளர்சிகளையும் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி மக்களின் வளமான வாழ்விற்கு வித்திடும் என்ற நம்பிக்கையை தன்னுள் மட்டுமின்றி ஒவ்வொரு மலேசியர் மத்தியிலும் விதைத்திருப்பதாக அவர் பெரும் நம்பிக்கையோடு மலேசிய மாநாட்டு மற்றும் கணகாட்சி பணியகத்தின் தலைவருமான அவர் குறிப்பிட்டார்.

