
தனது தலைமையிலான அரசாங்கத்தில் கொள்முதல் செய்வதற்கான ஒப்புதல்களை இனி டெண்டர் இல்லாமல் நடத்த முடியாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிரடியாக அறிவித்துள்ளார்.
புத்ராஜெயாவில் இன்று பிரதமர் துறை ஊழியர்களுடனான கூட்டத்தில் பேசியபோது அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
தனது தலைமையிலான அரசாங்கம் கசிவு மற்றும் ஊழலை தொடர்ந்து அனுமதிக்காது.
பொதுச் சேவை ஊழியர்கள் தம்முடன் இணைந்து பணியாற்ற வரும்படி டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.

