
கட்டார் நாட்டில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டங்களில் போர்ச்சுக்கல், பிரேசில் அணிகள் அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல் 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தியது.
54 ஆவது நிமிடத்தில் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பந்தை தலையால் முட்டி கோலாக்கினார்.
பின்னர் 93ஆவது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
இதை புருனோ பெர்னாண்டஸ் கோலாக்கினார்.
இதன் மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்திய போர்ச்சுக்கல் அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.
பின்னர் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது.
பிரேசில் அணியின் ஒரே கோலை 82 ஆவது நிமிடத்தில் கேஸ்மிரோ அடித்தார்.

