
நாட்டின் 10 ஆவது பிரதமராக பதவி ஏற்று புதிய வரலாறு படைத்திருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை செந்தமிழ் செல்வர் ஒம்ஸ் ப.தியாகராஜன் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளார்.
டத்தோஸ்ரீ அன்வாரின் நம்பிக்கைக்குரிய தலைவராக ஒம்ஸ் தியாகராஜன் விளங்கிக் கொண்டிருக்கிறார்.
காலங்காலமாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை முழு மனதுடன் ஆதரித்து கொண்டிருக்கும் ஓம்ஸ் தியாகராஜன் இந்திய சமுதாயத்திற்கு வாரி வழங்கியிருக்கிறார்.
இந்நிலையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் ஒம்ஸ் தியாகராஜன் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இன்று உலகமே போற்றும் ஒரு மாபெரும் தலைவராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளங்கிக் கொண்டிருக்கிறார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான புதிய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பல வகைகளில் பேருதவி புரியும் என்பதில் ஐயமில்லை.

