மித்ரா நிதியை மோசடி செய்தவர்கள்
தண்டிக்கப்பட வேண்டும்!
பத்து காஜா எம்பி சிவகுமார் முழக்கம்

ஏழை இந்திய சமுதாயத்திற்கு போய் சேர வேண்டிய மித்ரா நிதியை மோசடி செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் கோரிக்கை முன் வைத்துள்ளார்

ஆண்டுதோறும் வழங்கப்படும் 10 கோடி வெள்ளி மித்ரா நிதி முறையாக இந்திய சமுதாயத்திற்கு சேரவில்லை. இது தொடர்பாக பலமுறை நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்கப்பட்டும் முறையான பதில் இல்லை.

இப்போது டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான புதிய அரசாங்கம் மித்ராவை சீரமைக்க வேண்டும்.

இனியும் எவ்வித மோசடிகளும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதற்கு முன்னர் மித்ரா நிதியை மோசடி செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே பத்து காஜா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள சங்காட் தமிழ் பள்ளிகளுக்கு திடல் இல்லாததால் அருகில் காலியாக உள்ள நிலத்தை பெற்று தர பாடுபடுவேன் என்று நேற்று டேசா சங்காட் ருக்குன் தெத்தாங்கா ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் சிவகுமார் இவ்வாறு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles