
நான் அணிந்த காலணி தொடர்பில் கேள்வி கேட்க விரும்பினால் பரவாயில்லை.
ஆனால் அவதூறான கதைகளை சுமத்த வேண்டாம் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜொகூர் சுல்தான் எனக்கு இந்த காலணிகளை பரிசாக வழங்கினார்.
600 ரக மெர்டிஸ் கார் வேண்டாம், பிரதமர் சம்பளம் வேண்டாம் என்று கூறிய டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இப்போது 5,500 வெள்ளி மதிப்புள்ள காலணியை அணிந்திருக்கிறார் என்று குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து அவர் பதிலடி கொடுத்திருக்கிறார்.
இதனிடையே நெட்டின்கள் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவு தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டு உள்ளனர்.
நீங்கள் மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்க வில்லை.
நீங்கள் தாராளமாக இந்த காலணியை அணியலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

