
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அமாட் ஷாவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று இஸ்தானா நெகாராவில் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய அமைச்சரவை தொடர்பில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மாமன்னரை சந்தித்து இருக்கலாம் என்று கூறப்பட்டாலும் மேல் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இருப்பினும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இனி எந்த நேரத்திலும் புதிய அமைச்சரவை அறிவிக்கலாம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
நீதிமன்ற வழக்கை எதிர்நோக்கி இருக்கும் லிம் குவான் எங், டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, சைட் சாடிக், போங் ஆகியோர் அமைச்சரவையில் இடம் பெறுவார்களா என்பது பெரும் புதிராக இருக்கிறது.
இதனிடையே சைட் சாடிக் அமைச்சரவையில் இடம் பெறுவாரா என்ற கேள்விக்கு மூடா கட்சி தலைவர்கள் கருத்துரைக்கவில்லை.
அன்வாரின் அறிவிப்புக்கு காத்துக் கொண்டிருக்கிறோம் என்று மூடா அறிவித்துள்ளது.

