தங்கத்தில் முதலீடு செய்வது மிகவும் நல்லது! டத்தோ ஹாஜி அப்துல் ராசூல் நம்பிக்கை

கோலாலம்பூர் பிப் 7-
நாணயத்திற்கு பெரும் மதிப்பு இருக்கிறதை போல் தங்கத்திற்கும் எப்போதும் கிராக்கி இருக்கிறது.

இப்போது அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள டோனால்ட் டிராம் தங்க வியாபாரிகளை ஒருபோதும் கைவிட மாட்டார் என்று மலேசிய இந்திய பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ராசூல் நம்பிக்கை தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டோனால்ட் டிராம் ஒரு வணிகர் ஆவார்.

ஆகவே அவர் வணிகர்களையும் வியாபாரிகளையும் கைவிட மாட்டார் என்று நம்புகிறோம்.

யுத்தம் வரும் காலங்களில் தங்கத்தின் விலை உயர்கிறது.

அதேசமயம் டாலர் உயரும் போது தங்கத்தின் விலை குறைகிறது.

இப்போது தங்கத்தை வாங்க மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

ஆனால் சந்தையில் தங்கத்தின் விலை இப்போது கூடிக் கொண்டே இருக்கிறது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை சீராக இருக்க வல்லரசு நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலக அளவில் தங்க ஆபரணங்கள் விற்பனை துறையில் நான்கு லட்சம் வியாபாரிகள் இருக்கிறார்கள் என்று அவர் சொன்னார்.

தங்க வியாபாரிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு நல்ல முறையில் தீர்வு காண அமெரிக்கா அதிபர் டோனால்ட் டிராம் முன் வருவார் என்று நம்புகிறேன்.

தங்கத்தில் முதலீடு செய்தால் அது பிற்காலத்தில் பெரும் ஆதாயத்தை கொண்டு வரும்.

தங்கத்தை வாங்கினால் அதில் எந்தவொரு இழப்பும் இல்லை என்று அவர் சொன்னார்.

ஆகவே தங்கத்தின் விலை உயர்கிறது என்று பார்க்காமல் தங்கத்தில் முதலீடு செய்வது மிகவும் நல்லது என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles