

ஈப்போ, மார்ச் 3-
நாட்டில் எழுந்துள்ள நீரிழிவு நோயை கட்டுப்படுத்த அரசாங்கம் தொடர் நடவடிக்கை எடுத்து வரும் வேளையில் அதில் பேரா மாநில அரசு முதல் முறையாக உணவுகளில் இனிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்த முதல் மாநிலமாக விளங்குகிறது
அரசாங்க ஊழியர்களிடையே உடல் பருமன் பிரச்சனை தற்பொழுது தலை தூக்கியுள்ளதால் அவர்களுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வழங்கவும் பங்காற்றவேண்டியுள்ளது என்று பேராக் மாநில சுகாதாரத் துறை சுகாதாரம், மனிதவளம், தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் இந்திய சமூக விவகாரங்களுக்கான மாநில அரசு ஆட்சிக் குழுத் தலைவர்
அ. சிவநேசன் கூறினார்.
சீனியை கட்டுப்படுத்த அரசாங்க துறை நடத்தும் கூட்டங்களின் போது ஆரோக்கியமான சீனியில்லா உணவுகளை வழங்குவதை செயல்படுத்த ஈப்போவில் உள்ள மாநில அரசாங்க செயலகத்தில் நடத்தப்பட்ட கருத்தரங்கை தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் இதனை அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனியை உணவுகளில் கட்டுப்படுத்த பிரச்சார நடவடிக்கை பேரா மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
அதன் தொடர்பாக இந்த ஆண்டு அந்த நடவடிக்கையை விரிவாக்கம் செய்ய தொடர் நடவடிக்கையாக இங்குள்ள மாநில அரசாங்க செயலகத்தில் உள்ள பல் நோக்கு மண்டபத்தில் நடத்தப்பட்ட கருத்தரங்கை தொடக்கி வைத்து ஆற்றிய உரைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த சந்திப்பில் அரசாங்க ஊழியர்கள்கள் சீனியை கட்டுபடுத்த தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆலோசனைகளை கூறினார்
அந்த வகையில் . தோசை மற்றும் காய் கறி உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம் வாய்ந்தது என்று அரசாங்க அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.
அவைகள் பொதுச் சேவை துறை நடத்தும் நிகழ்வில். அவைகள் பரிமாறப்படவேண்டும் வலியுறுத்தபட்டுள்ளது என்ற தகவலையும் தெரிவித்தார் .
மலேசியா பல்வேறு நிலைகளில் ஊட்டச்சத்து குறைபாட்டின் இரட்டைச் சுமையின் சிக்கலை எதிர்கொள்கிறது.
அதிக எடை மற்றும் உடல் பருமன் பிரச்சனை வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பொதுவானதாகிவிட்டது.
அதே நேரத்தில், ஆரோக்கியமற்ற உணவு உட்கொள்ளும் முறைகள் காரணமாக இரத்த சோகை மற்றும் வளர்ச்சிக் குறைபாடு போன்ற ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன.
தேசிய சுகாதாரம் மற்றும் நோயுற்ற தன்மை கணக்கெடுப்பு 2023 இன் முடிவுகளின் அடிப்படையில், மலேசியாவில் 32.6% பெரியவர்கள் அதிக எடை கொண்டவர்களாகவும், 21.8% பேர் பருமனானவர்களாகவும் உள்ளனர்.
இதற்கிடையில், அதிக எடை மற்றும் உடல் பருமன் போக்கு 2019 இல் 50.1% இலிருந்து 2024 இல் 54.4% ஆக அதிகரித்துள்ளது. உண்மையில், 2019 இல் இதே ஆய்வு ஆபத்தான புள்ளிவிவரங்களைக் காட்டியது, அங்கு 60.3% அரசு ஊழியர்கள் அதிக உடல் பருமன் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக குறிப்பிட்டார்.
நாட்டில் குறிப்பாக ஊட்டசத்து குறைவாலும் பலர் இறந்து வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இந்த விவகாரம் ஒராங்க சமுகத்தில் பல காலமாக இருந்து வத்துள்ளது . அந்த சமுகத்தில் ஊட்டச்சத்து குறைவால சிறார்கள் பலர் இறந்து வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
அதனைக கட்டுபடுத்தவும் மறறத்தவர்கள் ஊட்டசத்து பிரச்சனையால் அவதியுற்று வந்தாலும் அவர்களும் நிதி உதவியை பெறலாம் என்று சிவநேசன் விளக்கம் அளித்தார்.

