சந்தையில் உள்நாட்டு அரிசி விநியோகத்தை சீர்படுத்த பிரதமர் உத்தரவு!

கோலாலம்பூர், மார்ச் 3 – சந்தையில் உள்நாட்டு வெள்ளை அரிசி விநியோகத்தை சீர்படுத்தும் முயற்சிகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.

உள்நாட்டு அரிசி விநியோகத்தை சீர்படுத்துவது தொடர்பான மேம்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு தொடர்ந்து தெரிவிக்குமாறு அமைச்சுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளதாகப் பிரதமரின் மூத்த பத்திரிகைச் செயலாளர் துங்கு நஷ்ருள் அபைடா கூறினார்.

இறைவன் அருளால் உள்ளூர் அரிசி விநியோகத்தை சீர்படுத்தும் பணி கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படுகிறது என்று பிரதமர் அலுவலகத்தின் தினசரி விளக்கமளிப்பில் துங்கு நஷ்ருல் கூறினார். இந்த விளக்கமளிப்பு இன்று அன்வார் இப்ராஹிம் மற்றும் மலேசியப் பிரதமர் அலுவலகத்தின் முகநூலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles