ஜசெக மாநாட்டில்பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து சிறப்பித்தார்

மா.பவளச்செல்வன்

ஷா ஆலம், மார்ச் 16-
Dap எனப்படும்
ஜனநாயக செயல் கட்சியின் 18ஆவது தேசியப் பேரவைக்குப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்பு வருகை புரிந்தார் .

ஷா ஆலம் ஐடிசிசி மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டபோது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

DAP கட்சித் தேர்தலும் இன்று நடைபெறவுள்ளதால் CEC கட்சி உயர்மட்ட செயற்குழு பதவிகளுக்கான தேர்தல் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நம்பிக்கை கூட்டணியின் தலைவருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் காலை 10 மணிக்கு வருகை மேற்கொண்டார்.

அவருடன் DAP கட்சித் தலைவர் லிம் குவான் எங், துணைத் தலைவர் கோபிந்த் சிங் டியோ ஆகியோர் உடன் வந்தனர்

மேலும் இந்த நிகழ்ச்சியில் DAP கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோனி லோக், நிர்வாக செயலாளர் ஸ்டீவன் சிம், அமானா கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் சாபு , கெஅடிலான் கட்சியின் தேசிய துணை செயலாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் உட்பட பல வெளிநாட்டு தூதர்களும் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles