திடீர் வெள்ளம் காரணமாக ஷா ஆலமில் மக்கள் பாதிப்பு

ஷா ஆலம், ஏப். 11- நேற்றிரவு தொடங்கி தொடர்ச்சியாக பெய்து வரும்
கனமழை காரணமாக ஷா ஆலமின் பல பகுதிகளில் குறிப்பாக
சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பேரிடர் காரணமாக
செக்சன் 23, தாமான் ஸ்ரீ தாமான் ஸ்ரீ மூடா அருகே வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு தொடங்கி கனமழை பெய்த போதிலும் நீர் இறைப்பு
இயந்திரங்கள் விடியற்காலை 3.00 மணிக்குதான் செயல்படத்
தொடங்கியதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது.

நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் வெள்ளம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை. தற்போதுள்ள வெள்ளத் தடுப்பு முறை போதுமானதல்ல என்பது இதன் மூலம் தெரிய
வருகிறது என்று அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சாம்புநாதன், குறிப்பிட்டார்.

ஆகவே, இவ்விவகாரத்தில் நேரடியாக தலையிடும் படி மந்திரி புசாரை
நான் கேட்டுக் கொள்கிறேன். வெள்ளத் தணிப்புத் திட்டத்திற்காக மாநில
அரசு பெரும் தொகையைச் செலவிட்டுள்ளதை நான் அறிவேன்.
குத்தகையாளர்களின் பணிகள் முறையாகக் கண்காணிக்கப்பட வேண்டியதன்
அவசியத்தை இது உணர்த்துகிறது.

இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக வடிகால் மற்றும் நீர்பாசனத்
துறை (ஜே.பி.எஸ்.) மற்றும் ஊராட்சி மன்றம் போன்ற துறைகள் மந்திரி
புசார் அலுவலகத்தின் நேரடிப் பார்வையின் கீழ் கொண்டு வரப்பட
வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.

எனது தொகுதி மக்கள் யாரையும் குறை கூற விரும்பவில்லை. அவர்கள்
தீர்வைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அரசாங்கம் பரிவுடன் செயல்பட்டு
குறைகளைச் செவிமடுத்து உறுதியான உடனடியாக எடுப்பதைக் காண
விரும்புகிறார்கள் என பிரகாஷ் கூறினார்.

எத்தனை முறைதான் கோத்தா கெமுனிங் மக்கள் இடம் பெயர்வது?
எத்தனை முறைதான் சொத்துகள் அழிவதை பார்த்துக் கொண்டிருப்பது?
இந்த பிரச்சனை புதிதல்ல. பல ஆண்டுகளாக மக்கள் குரல் எழுப்பி வரும்
பிரச்சனைதான்.

ஆகவே, மந்திர புசார் கருணை கூர்ந்து கோத்தா கெமுனிங் வெள்ளப்
பிரச்சனையில் உரிய கவனம் செலுத்த வேண்டும். எங்களுக்கு
காரணங்கள் தேவையில்லை. பலனை மட்டுமே காண விரும்புகிறோம்
என்று அவர் அந்த அறிக்கையில் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles