
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் 4 கட்டங்களாக தேசிய கொடியுடன் யாத்திரை நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். வரும் 18ம் தேதி முதல் 23ம் தேதிவரை 4 கட்டங்களாக இந்த யாத்திரை நடைபெற உள்ளது.
வீரத்துடனும், விவேகத்துடனும், வித்தகத்துடனும், வேகத்துடனும், துல்லியமாகத் தாக்குதல் நடத்தி, மாபெரும் வெற்றிக்கு அடிகோலிய நமது ஆயுதப்படைகளையும், மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் உறுதியான தலைமையையும் சிறப்பிக்கும் வகையில், அடுத்த சில நாட்களுக்கு மிகப்பெரிய அளவில் மூவர்ணக் கொடி ஏந்திய யாத்திரைகள் நடத்திட செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த யாத்திரைகள் நாட்டிற்காக நாட்டு மக்களால் நான்கு கட்டங்களாக நடைபெறும்
* மாநிலத் தலைநகரம் சென்னையில் மே 14-ஆம் தேதியும்
* இதர முக்கிய நகரங்களில் மே 15-ஆம் தேதியும்
* மற்ற மாவட்ட பேரூர்களில் மே 16 மற்றும் 17-ஆம் தேதியும்
* சட்டசபைத் தொகுதிகள், தாலுகாவின் ஊர்கள், பெரிய கிராமங்கள் ஆகிய இடங்களில் மே 18 முதல் 23-ஆம் தேதி வரையும் நம் தேசியக் கொடியான “மூவர்ணக் கொடி ஏந்திய யாத்திரைகள்” நடத்த ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.