
லெங்கோங், மே 13 – மத்திய சேமப்படையின் உறுப்பினர்களை பலி
கொண்ட எஃப்.ஆர்.யு. வாகனம் மற்றும் கல் ஏற்றிய லோரி சம்பந்தப்பட்ட
விபத்து தொடர்பில் அரச மலேசிய போலீஸ் படையின் மூலம் உள்துறை
அமைச்சு விரிவான விசாரணையை மேற்கொள்ளும்.
தெலுக் இந்தான், ஜாலான் சிக்குஸ்-சுங்கை லம்பான் சாலையில் நிகழ்ந்த
இந்த விபத்தில் பலியானவர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தைத்
தெரிவித்துக் கொண்ட உள்துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர்
சம்சுல் அனுவார் நசாரா, இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின்
குடும்பத்தின் நலன் காப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகள்
எடுக்கப்படும் என்றார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இந்த இக்கட்டான
சூழலை எதிர்கொள்வதற்குரிய மனவலிமையைப் பெற்றிருப்பார்கள் எனத்
தாம் நம்புவதாக அவர் சொன்னார்.
bernama