வாகனங்களை கைப்பற்றும் நபர்களுக்கு அதிகார அட்டை கட்டாயமாக்கப்பட வேண்டும்!

கோலாலம்பூர் ஜூன் 6-
வாகனங்களை கைப்பற்றும் பணியில் ஈடுபடும் நபர்களுக்கு வழிகாட்டி விதிமுறைகள், பயிற்சி மற்றும் அதிகார அட்டைகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்

வங்கிகளில் மாதம் தவறவிட்டு கட்ட முடியாத நிலைக்கு வந்த பயனாளர்களின் வாகனங்களை கைப்பற்றும் வேலைக்கு வந்தவர்கள் இன்று சமூகத்தில் பயம் அளிக்கும் வகையில் செயல்படுகிறார்கள்.

இவர்கள் பெரும்பாலும் குழுவாக வந்து, “கேங்ஸ்டர்” போல் நடந்து கொண்டு, வாகன உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றனர்.

இந்த நிலைமை சட்டப்படி இயங்கும் நம் நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

இதனை சீரமைக்கும் வகையில், நான் கீழ்காணும் பரிந்துரைகளை முன்வைக்கிறேன்:

  1. வாகனங்களை மீட்கும் செயற்பாடுகளுக்காக உள்துறை அமைச்சகத்தால் (KDN) தெளிவான வழிகாட்டி விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
  2. வாகனங்களை கைப்பற்றும் பணியில் ஈடுபடும் அனைத்து நபர்களும் காவல் துறையின் (PDRM) பாதுகாப்பு சரிபார்ப்பு மற்றும் தொழில்முறை பயிற்சி பெற வேண்டும்.
  3. அவர்கள் பணியாற்றும் போது காட்ட அதிகார அட்டை (அதிகாரபூர்வ ஐடிகார்ட்) கட்டாயமாக வழங்கப்பட வேண்டும்.
  4. மேலும், வங்கிகள் சரியான உரிமம் பெற்ற பாதுகாப்பு நிறுவனங்களை மட்டும் வாகனங்களை மீட்கும் பணிக்காக நியமிக்க வேண்டும். இவை KDN ஆல் அனுமதி பெற்ற நிறுவனங்கள் ஆக இருக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் மக்கள் பாதுகாப்பையும், சட்டத்தின் மரியாதையையும் உறுதிப்படுத்தும். இது வாகன உரிமையாளர்களுக்கும், வங்கிகளுக்கும், மற்றும் பணியாளர்களுக்கும் சமநிலையான பாதுகாப்பை வழங்கும்.

இந்தக் கடுமையான சூழ்நிலையை அரசாங்கம் பரிசீலித்து, முறையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Dato டி. முருகையா
MIC Vice President 
திகதி: 05/6/25

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles