
புத்ராஜெயா: ஜூலை 23-
வரும் செப்டம்பர் மாதம் முதல் ரோன் 95 பெட்ரோலின் விலை 1.99 ரிங்கிட்டாக குறைக்கப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அதிரடி அறிவிப்பு செய்தார்.
நாட்டு மக்கள் பயன் பெறும் நோக்கில் பெட்ரோலின் விலையை குறைக்க வேண்டும் என்பது மடானி அரசாங்கத்தின் இலக்காகும்.தற்போது ரோன் 95 பெட்ரோலில் விலை 2.05 ரிங்கிட்டிற்கு விற்கப்படுகிறது.
வரும் செம்டம்பர் மாதம் முதல் இந்த பெட்ரோலில் விலை 1.99 ரிங்கிட்டாக குறைக்கப்படும் என்று இன்று அவர் சொன்னார்.
இதன் மூலம் 18 மில்லியன் மக்கள் பயன் பெறுவார்கள். மேலும் பொதுமக்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி 1.99 ரிங்கிட் விலையிலான பெட்ரோலை பெற்றுக் கொள்ளலாம் என்றார்

