
கோத்தா கெமுனிங், ஆக 11 – வேகமாக முன்னேறி வரும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) இன்று நாம் வேலை செய்வது, கற்றல் மற்றும் தொடர்பு கொள்வது போன்ற அனைத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை சமூகத்திடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், கோத்தா கெமுனிங் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் (ADUN) பிரகாஷ் சம்புநாதன் அவர்கள் ஆகஸ்ட் 9ஆம் தேதி கெனங்கா மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கினை நடத்தினார்.
இந்த கருத்தரங்கில் தொழில்நுட்ப நிபுணர்கள், தொழில் துறை நிபுணர்கள் மற்றும் சமூக தலைவர்கள் கலந்து கொண்டு, AI-யின் தினசரி பயன்பாடுகள், பல துறைகளில் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் எதிர்கால தொழில்நுட்ப அடிப்படையிலான பொருளாதாரத்தில் உருவாகும் வேலை வாய்ப்புகள் குறித்து அறிவைப் பகிர்ந்தனர்.
“AI என்பது புதிய சொல் மட்டும் அல்ல, இது ஏற்கனவே எங்கள் வாழ்வின் ஓர் அங்கமாகியுள்ளது.

இந்த கருத்தரங்கின் மூலம், கோத்தா கெமுனிங் மக்கள் தயாராக, போட்டித்தன்மை உடையவர்களாக, மற்றும் மின்னியல் யுகத்தில் முன்னணி வகிப்பவர்களாக மாற வேண்டும் என நான் விரும்புகிறேன்,” என்று பிரகாஷ் சம்புநாதன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் இடம் பெற்ற தொடர்பு அமர்வுகள், நேரடி காட்சி மற்றும் கேள்வி-பதில் பகுதிகள், பங்கேற்பாளர்களின் உற்சாகமான வரவேற்பைப் பெற்றன.
மாணவர்கள், தொழில்முனைவோர், தொழில்முறை நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட மாணவர்கள் தொழில்நுட்பங்களை கற்கும் ஆர்வம் அதிகரித்திருப்பதை காட்டுகிறது.
சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் அவர்கள், சமூக வலிமைப்படுத்தலுக்காக கல்வி, புதுமை மற்றும் மின்னியல் இணைவின் வாயிலாக இத்தகைய நிகழ்ச்சிகளை எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்துவதாக வலியுறுத்தினார்.
இப்பயிற்சியில் 300 க்கும் மேற்பட்ட இளைஞர்கள்,மாணவர்கள் என்று பல துறைகளை சார்ந்த பலர் கலந்துக்கொண்டு நன்மை அடைந்தனர்.

