கோவில்களில்
தமிழில் அர்ச்சனை! தமிழில் மந்திரம்!
மலேசியா தமிழர் வேலன்படை வரவேற்பு

நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை மற்றும் தமிழில் மந்திரம் ஒதப்படும் என்று ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா மற்றும் மலேசியா இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துகளை மலேசியா தமிழர் வேலன் படை பெரிதும் வரவேற்றுள்ளது.

சமஸ்கிருதத்தில் வேதங்கள், மந்திரங்கள் ஓதப்படும் வேளையில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல நூற்றாண்டுகளாக வலியுறுத்தப்படுகிறது.

இந்நிலையில் கோவில்களில் தமிழில் அர்ச்சனை என்ற செய்தி காதில் தேன் போல் பாய்கிறது.

நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை மற்றும் மந்திரங்கள் ஓதப்படும் என்று டான்ஸ்ரீ நடராஜா, தங்க கணைசன் ஆகியோர் கூறியிருப்பது காலத்திற்கு ஏற்ப வரவேற்கிறோம் என்று மலேசிய வேலன் படை தேசியத் தலைவர் சுரேந்திரன் பலராமன், பேராக் மாநில வேலன் படைத் தலைவர் தினகரன் கோவிந்தசாமி, வேலன் படை இயக்கத்தின் செயலாளர் சசிகலா மோகன், வேலன் படை துணை தலைவர் கர்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles