
போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கின் அரசியல் செயலாளராக நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெ.அருள்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாளை வெள்ளிக்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் அருள்குமார் பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்.
போக்குவரத்து அமைச்சரின் அரசியல் செயலாளராக பதவி ஏற்பதால் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இவருக்கு பதிலாக வோறோருவர் நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழுவில் இடம் பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு முதல் இதுவரை நீலாய் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அளுள்குமார் மிகச் சிறந்த சேவையாளர் ஆவார்.
போக்குவரத்து அமைச்சரின் அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் அருள்குமாருக்கு தினத்தந்தி சிட்டிசன் இணையத்தளம் மனதார வாழத்துகிறது.

