பத்துமலை தைப்பூசத்திற்கு வருகை தரும்படி
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு அழைப்பு

வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி உலக முழுவதும் தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

மலேசியா திருநாட்டில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடும் தைப்பூசத் திருவிழாவில் கலந்து சிறப்பிக்கும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா இன்று அழைப்பிதழ் கொடுத்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருடன் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவசனத்தின் அறங்காவலர் டத்தோ கண்ணா சிவகுமார் மற்றும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம் சரவணன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles