இந்து மதத்தை ஆபாச வார்த்தைகளில் இழிவாக பேசிய ஆடவர் கைது! தேசம் குணாளன் மணியம், மாக் மண்டின் குமார் மற்றும் பலர் போலீஸ் புகார் செய்ததன் எதிரொலி

செலாயாங் ஜெயா,நவ.27-
காளியம்மன், துர்க்கை அம்மன், இயேசுநாதர், புத்தமதம் மற்றும் சீனர் கோயில்களை ஆபாச வார்த்தைகளில் இழிவாக பேசிய முகமட் அலி @ கே.ஆனந்தன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சிரம்பான் காவல்துறையில் முதல் போலீஸ் புகார் செய்யப்பட்டது. அதன் பிறகு தொடர்ச்சியாக 10க்கும் மேற்பட்ட போலீஸ்புகார்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து மாக் மண்டின் குமார், தேசம் குணாளன் மணியம் மற்றும் சிலர் கோம்பாக் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

கோம்பாக் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த அந்நபர் தற்போது சிரம்பான் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசும் சம்பவங்கள் தற்போது கண்மூடித்தனமாக அதிகரித்து வரும் நிலையில் மதம் மாறிய இந்திய நபர் ஒருவர் இந்து மத சிலைகள் குறித்து ஆபாசமாக பேசிய காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து அவருக்கு எதிராக ஆங்காங்கே 10க்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

செலாயாங் ஜெயாவை சேர்ந்த முகமட் அலி என்று அடையாளம் கூறப்பட்ட கே.ஆனந்தன் என்ற அந்நபர் காளியம்மன், துர்க்கை அம்மன், இயேசுநாதர் மற்றும் புத்த மதங்களை ஆபாச வார்த்தைகளை கொண்டு இழிவாக பேசியிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட சில இளைஞர்கள் அந்நபரை தேடினர். அந்நபர் செலாயாங் ஜெயாவில் உள்ள ஒரு அங்காடியில் இருப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்று அந்நபரை கையும் களவுமாக பிடித்தனர். அந்நபரை மன்னிப்பு காணொளி செய்யச் சொன்னதோடு போலீஸ்சுக்கு தகவல் கொடுத்து அந்நபரை கோம்பாக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

அந்நபரை மாக் மண்டின் குமார் நேரில் பார்த்து எச்சரித்தோடு கோம்பாக் போலீஸ் தலைமையக காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த நபருக்கு எதிராக இதுவரை 10க்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பில் முதல் போலீஸ் புகார் சிரம்பானில் செய்யப்பட்டதால் சம்பந்தப்பட்ட நபர் சிரம்பான் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்து மதம் குறித்து ஆபாச வார்த்தைகளை கொண்டு இழிவாக பேசிய நபருக்கு எதிராக மாக் மண்டின் குமார் கோம்பாக் காவல்துறையில் புகார் செய்து 3R சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசம் ஊடகத்தின் தோற்றுநரும் தலைமை ஆசிரியருமான குணாளன் மணியம் அவர்களும் கோம்பாக் காவல்நிலையத்தில் புகார் செய்து 3R சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles