21 உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு மடிக்கணினி! கிந்தா இந்தியர் சங்கமும், பாரிட் மஇகா தொகுதியும் உதவியது.

ஈப்போ, டிச. 8:
பேராக் மாநிலத்தில் 21 தொகுதிகளிலிருந்து 21 உயர்கல்விகூட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.

இன்றைய காலகட்டத்தில் மடிக்கணினி மாணவர்கள் பயில்வதற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

அதன் அடிப்படையில் 21 பி 40 மாணவர்களுக்கு உதவியதாக பாரிட் ம இ கா தொகுதித்தலைவரும், வழக்கறிஞர் மற்றும் கிந்தா இந்தியர் சங்கத்தின் ஆலோசகருமான மோகன் சுப்பிரமணியம் கூறினார்.

இந்நிகழ்வை பாரிட் ம இ கா தொகுதியும், கிந்தா இந்தியர் சங்கமும் ஒன்றிணைந்து இந்த இந்திய மாணவர்களுக்கு உதவினர். இம்மாதிரியான உதவிகளை மாணவர்களுக்கு செய்ய ஆர்வம் கொண்டவர்கள் முன்வரலாம். அத்துடன், கிந்தா இந்தியர் சங்கத்திற்கு இது ஒரு நல்ல சமூக பணியாகும். இதனால் நல்லதொரு வரவேற்பு கிடைத்து வருவதாக அவர் சொன்னார்.

இந்த உதவிகள் யாவும் தம்முடைய நண்பர்கள் வாயிலாகவும், தம்முடைய முயற்சியாலும் கிடைக்கப்பெற்றது.

கல்வியால்தான் நம்முடைய இந்திய சமூகம் மேம்பாடு காணமுடியும். அதன் அடிப்படையில் இத்தகைய உதவிகள் நல்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்தாண்டு இம்மாதிரியான மடிக்கணினி நான்கு உயர்கல்வி மாணவர்களுக்கு கிந்தா இந்தியர் சங்கம் வழங்கியது. பல உயர்கல்வி மாணவர்கள் மடிக்கணினி இல்லாமல் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் பொருட்டு இத்தகைய சமூகப்பணிகள் மேற்கொண்டு வருவதாக கிந்தா இந்தியர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஆர்.தங்கராஜா கூறினார்.

இம்மாதிரியான சமூக உதவிகள் செய்ய எண்ணுவோர் எங்களை தொடர்புக் கொண்டு பின் இணைந்து செய்யலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், கிந்தா இந்தியர் சங்கத்தின் செயலவை உறுப்பினர்கள், பேராக் மஇகா தொகுதித்தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் உயர்கல்வி மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles