ஈப்போவில் AA கிளாசிக் ஹோம் 3 ஆவது கிளையைநடிகை ஸ்ரீ திவ்வியா திறந்து வைத்தார்!

ஈப்போ, டிச.8:
ஈப்போ லிட்டல் இந்தியா வளாகத்தில் aA கிளாசிக் ஹோம் மூன்றாவது கிளை நிறுவனத்தை திறப்பு விழா செய்துள்ளது.

இந்த பூஜை மேடைகள் விற்பனை செய்யும் நிறுவனமாக இது திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் 3 ஆவது கடையை ஈப்போ லிட்டல் இந்தியா வளாகத்தில் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார் தமிழக திரைப்பட நடிகை ஸ்ரீ திவ்வியா.

இந்த பூஜை மேடைகள் கடையை திறந்து வைத்த பின் இக்கடையை பார்வையிட்டார் நடிகை ஸ்ரீ திவ்வியா.

இந்த கடையின் அமைப்பு மற்றும் இங்குள்ள பொருட்களை காணும் பொழுது உள்ளம் குளிர்கிறது மற்றும் மகிழ்ச்சியாக உள்ளது என்று அவர் கூறினார்.

குறிப்பாக, இங்கு வைக்கப்பட்டுள்ள ஊஞ்சல்கள் என் மனதை கவர்ந்து விட்டது. ஆகையால், இங்குள்ள பொருட்களில் ஊஞ்சல்களை வழங்கினால் எடுத்துச் செல்வேன் என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.

இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுரேஷ் மற்றும் அவரது இணை இயக்குநர்கள் மேலும் அதிகமான இதுபோன்ற கிளை நிறுவனங்களை திறக்க வேண்டும். அத்துடன், அவர்களது வணிகம் மென்மேலும் மேம்பாடு காண வேண்டும் என்று அவர் வாழ்தினார்.

இந்நிகழ்வில், இந்நிறுவனம் சமூக மனிதநேய பணியாக ஈப்போ வட்டாரத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்கினர்.

அதுமட்டுமின்றி, இங்குள்ள ஆலயங்களுக்கு நிதியுதவி வழங்கி சிறப்பித்தனர்.

இந்நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக ராகா வானொலி நிலைய அறிப்பாளர் விகடகவி மகேன் வருகையாளர்கள் சுமார் 100 அன்பர்களுக்கு உத்திராட்சம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சி அறிவிப்பாளரும், நடிகருமான உதயாவின் தலைமையில் இந்நிகழ்வு சிறப்பாக வழிநடத்தப்பட்டது. அதோடு வருகையாளர்களுக்கு தங்க நாணயமும் வழங்கப்பட்டது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles