பராசக்தி படம் திமுக வரலாற்றுக்கு இடப்பட்ட வெற்றித் திலகம்; தமிழ்த் தீ பரவட்டும்: கமல்ஹாசன் எம்.பி.

சென்னை: பராசக்தி படம் திமுக வரலாற்றுக்கு இடப்பட்ட வெற்றித் திலகம் என கமல்ஹாசன் எம்.பி. தெரிவித்துள்ளார். பராசக்தி திரைப்படத்தை பார்த்த பின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

அதில்; பராசக்தி படத்தைப் பார்க்கத் தொடங்கும் முன் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, இந்தப் படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது என்று. ஆம், இந்தப் படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல, என் உண்மையான வாழ்த்தும் கூட. இந்தப் படம் திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம்.

பின்னால் வந்தாலும் முந்திச் சொல்ல வேண்டியது. உணர்ச்சி முந்திக்கொண்டதால் பின்தங்கிய குறிப்பு இது. முதல் பாராட்டு இந்த பயோஃபிக் ஷன் கதையையும், இதன் இயக்குனர் சுதா கொங்கராவையும், இக்கதையைத் தேர்ந்து இதற்காக உழைத்து வெற்றியும் காணப்போகும் சிவகார்த்திகேயனையும் சேரும்.

இந்தச் சினிமாச் சரித்திரத்தில் இணைந்துவிட்ட ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும், ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், எடிட்டர் சதீஷ் சூரியா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மற்றும் இந்தப் படத்துக்காக உழைத்த அனைவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles