
சென்னை ஜன 13-
தமிழ் நாடு அரசு ஏற்பாட்டில் அயலகத் தமிழர் மாநாட்டில் தேசிய நிலநிதி கூட்டுறவு கழகத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ சகாதேவன் கலந்து சிறப்பித்தார்.
மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த மாநாட்டில் மலேசியாவில் இருந்து 500க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் டத்தோ பா. சகாதேவன் அவர்களுக்கு உலக சாதனையாளர் எனும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாட்டில் நடந்த உலகத் தமிழர் பொருளாதார நிறுவனம் மற்றும் மெட்ராஸ் மேம்பாட்டுக் கழகம் ஏற்பாட்டில் இந்த விருது வழங்கப்பட்டது.

