

பாண்டிச்சேரி,ஜன 13-
சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் மாநாட்டில் மலேசியாவில் இருந்து மலேசியத் தமிழர் சங்கத்தின் சார்பில் 24 பேராளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
தமிழ் நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் உலகில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பாண்டிச்சேரியில் முதலமைச்சரை மலேசியத் தமிழர் சங்கத்தின் சார்பாக 24 பேர் அடங்கிய குழு சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியது.
பாண்டிச்சேரி முதல் அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதலமைச்சருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து முருகப் பெருமான் சிலையும் அன்பளிப்பு செய்யப்பட்டது.
அதோடு 3 முக்கிய கோரிக்கைகளை மலேசியத் தமிழர்கள் சார்பாக அதன் தலைவர் பரமசிவம் மதுரை முன் வைத்தார்.
மலேசிய தமிழர் சங்கத்தின் சார்பாக இங்கே வந்து கல்வி கற்பதற்கு 5 உபகாரச் சம்பளம் கேட்டிருந்தோம். அதற்கு முதல் அமைச்சர் சரி என்று ஒப்புக்கொண்டார்.
இந்த ஆண்டு மலேசியதங தமிழ் சங்கத்தின் வெள்ளி விழா கொண்டாட்டம் எதிர்வரும் மே மாதம் 23ஆம் தேதி தலைநகரில் நடைபெற இருக்கின்றது. அந்த விழாவிற்கு வரும்படி அவரை அழைத்தோம். அந்த அழைப்பினை ஏற்றுக் கொண்டார்.
அதோடு, அந்த விழாவில் பங்கேற்கும்படி ஒரு கலை கலாச்சார குழுவை அனுப்பி வைக்கும்படி கேட்டு ட்டிருந்தோம் அதற்கும் அவர் சரி என்று ஏற்றுக் கொண்டார் என்று பரமசிவம் மதுரை தெரிவித்தார்.

