பினாங்கு தைப்பூசத்தில் பல சேவைகளை வழங்க முன் வருகிறது தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை அமைச்சு!

கோலாலம்பூர் ஜன 28-
தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தைப்பூசம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் பத்துமலை தைப்பூசத்தை அடுத்த லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் தைப்பூசமாக பினாங்கு விளங்குகிறது.

பிப்ரவரி 1 ஆம் தேதி பினாங்கு தைப்பூசத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை அமைச்சு பல சேவைகளை வழங்க முன் வருகிறது என்று அதன் அமைச்சர் ஸ்டீபன் சிம் இன்று தெரிவித்தார்.

Malaysia (AIM), National Entrepreneurship Institute (INSKEN), Malaysian Cooperative Commission (SKM), Malaysian Cooperative Institute (IKMa), Bank Rakyat, SME Bank, SME Corp. Malaysia மற்றும் UDA Holdings உள்ளிட்ட KUSKOP இன் கீழ் உள்ள ஒன்பது நிறுவனங்களின் பங்கேற்புடன் தைப்பூச கொண்டாட்டம் KUSKOP ஒரு சேவை மையத்தைத் திறக்கும் என்று அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

வழங்கப்படும் சேவைகளில் வணிக நிதித் தகவல் விநியோகம், தொழில் முனைவோர் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல், தொழில்முனைவோர் பதிவு மற்றும் கூட்டுறவு தொடர்பான ஆலோசனை சேவைகள், ஓய்வு அறைகள், இலவச சுகாதார பரிசோதனைகள், தாய்ப்பால் கொடுக்கும் அறைகள் மற்றும் இலவச உணவு விநியோகம் ஆகியவை அடங்கும் என்று அவர் சொன்னார்.

கூட்டத்தை நிர்வகிப்பதில் உதவுவதற்கும், முதியவர்கள், குழந்தைகள் ஊனமுற்றோருக்கு உதவி வழங்குவதற்கும் 200 KUSKOP Wira தன்னார்வலர்கள் திரட்டப்படுவார்கள்.

இந்த தன்னார்வலர்கள் பினாங்கில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த 17 முதல் 30 வயதுடைய இளைஞர்களாவர்.

மடானி கூடாரத்தில் இலவச, வசதியான ஓய்வு அறையில் ஒரே நேரத்தில் 200 பேர் வரை தங்கி ஓய்வு எடுக்க முடியும். இந்த ஓய்வு அறை முன்னணி ஊழியர்கள், முதியவர்கள், தாய்மார்கள், குழந்தைகள், உடல்நிலை சரியில்லாத பக்தர்களுக்காக உருவாக்கப்படுகிறது.

KUSKOP மேலும் இலவச பானங்கள், உணவுகளையும் வழங்கவிருக்கிறது.

கூடுதலாக, இந்திய சமூக தொழில்முனைவோர் நிதித் திட்டம் (SPUMI) தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்றும், இந்திய சமூக தொழில்முனைவோரின் வளர்ச்சியை ஆதரிப்பதற்காக அரசாங்கத்திடமிருந்து கூடுதல் நிதி 30 மில்லியன் ரிங்கிட்டில் இருந்து 50 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

2026ஆம் ஆண்டில், SPUMI 136 இந்திய சமூக தொழில்முனைவோருக்கு 4.089 மில்லியன் ரிங்கிட்டை வழங்கியுள்ளது. இந்த முயற்சியின் மூலம், KUSKOP அறிமுகப்படுத்திய ABCD உத்திக்கு ஏற்ப மூலதனத்தை அணுக KUSKOP உறுதிபூண்டுள்ளது என்று இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பினாங்கு புக்கிட் குளுக்கோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் மற்றும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles