இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம்

கோலாலம்பூர், பிப் 5 – எதிர்வரும் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

நமது நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பின் பேரில் இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதாவது வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, மலேசிய இந்திய வம்சாவளியினருடன் மோடி கலந்துரையாடுவார் என இந்திய வெளியுறவு அமைச்சு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் தொழில்துறை மற்றும் வணிக பிரதிநிதிகளும் கலந்து கொள்வர்.

பிரதமர் அன்வாரின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்தப் பயணத்தை முன்னிட்டு 10வது இந்தியா-மலேசியா தலைமை நிர்வாக அதிகாரி மன்றமும் நடைபெற உள்ளது.

“இந்தியா-மலேசியா உறவுகள் பன்முகத்தன்மை கொண்டவை மற்றும் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. இந்த வருகை இரு தலைவர்களுக்கும் இருதரப்பு ஒத்துழைப்பின் முழு நோக்கத்தையும் மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles