புலம் பெயர்ந்த அந்நியத் தொழிலாளர்கள் செய்தி தொடர்பாக மலேசிய கினி நிருபர் நந்தா வீட்டில் காவல் துறை சோதனை!

கோலாலம்பூர் ஏப் 27-
நாட்டில் மிகவும் பிரபலமான பத்திரிகையாளர் மலேசிய கினி பி.நந்தகுமார்.

புலம் பெயர்ந்த அந்நியத் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி தொடர்பாக இன்று காவல் துறை அவரது இல்லத்தில் சோதனை நடத்தியது.

இன்று பிற்பகல் 2 .30 மணிக்கு சீருடை அணியாத இரண்டு காவல் துறை அதிகாரிகள் ஸ்ரீ செர்டாங்கில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து சோதனை நடத்தியதாக நந்தகுமார் தெரிவித்தார்.

வெளிநாட்டு தொழிலாளர்களை பணி அமர்த்துவதற்கான முன் மொழியைப்பட்ட புதிய முறை கேள்விகளை எழுப்புகிறது என்ற தலைப்பில் வெளியான செய்தி தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles