
கோலாலம்பூர், மே 21– நாடு தழுவிய மொழிபெயர்ப்பாளர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, கடந்த மே 17ஆம் தேதி Grand Continental Kuala Lumpur தங்கும் விடுதியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மொழிகளை இணைத்து மனங்களை இணைக்கும் உயரிய பணியில் ஈடுபட்டு வரும் மொழிபெயர்ப்பாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, அன்பும் ஒற்றுமையும் நிறைந்த தருணங்களை பகிர்ந்து கொண்டனர்.
“மொழி வேறானாலும், மனம் ஒன்றே” என்ற உயரிய கருத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்ததாக பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர். நிகழ்வின் போது எடுக்கப்பட்ட குழுப் புகைப்படங்கள் மறக்க முடியாத நினைவுகளைப் பதிவு செய்தன.
மேலும், இந்நிகழ்வில் சேவையில் அனுபவமிக்க பல மூத்தவர்களையும், நன்நெஞ்சர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த இனிய ஒன்றுகூடலை சிறப்பாக ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்களுக்கு பங்கேற்பாளர்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
அனைவரும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வாழ இறைவனின் அருள் கிடைக்க வேண்டியும் பிரார்த்தனை செய்யப்பட்டது

